ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவினால் நவம்பர் 25 ஆம் திகதியிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை ஸ்ரீலங்கன் எயர்லைன்சினை தனியார் மயப்படுத்தும் திட்டத்தினை கைவிடும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும் வகையில் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நஷ்டத்தில் சிக்கியுள்ள ஸ்ரீலங்கன் எயர்லைன்சினை தனியார் மயப்படுத்தும் திட்டத்தை ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க கைவிட்டுள்ளார் என தெரிவித்துள்ள ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் புதிய தலைவர் சரத்கனேகொட மிகவும் இலாபகரமானதாக அதனை மறுசீரமைக்கும் திட்டம் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
விமான சேவையே சுற்றுலாத்துறையின் முக்கியமான தூண் என தெரிவித்துள்ள அவர் 50 வீதமான சுற்றுலாப் பயணிகள் இதன் மூலமே இலங்கை வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment