எனவே மழை வெள்ளத்தால் அழிவடைந்த பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 40,000 ரூபா இழப்பீடு வழங்கப்படும் என்று விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
நெல், சோளம், உருளைக்கிழங்கு, சோயா, மிளகாய் மற்றும் வெங்காயம் உள்ளிட்ட 6 பயிர்களுக்கு இழப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 40,000 ரூபாய்க்கு உட்பட்டு இழப்பீடு வழங்கப்படும்.
அழிவடைந்த பயிர்களை மீளப் பயிரிடுவதற்காக விவசாயிகளுக்கு இலவச பயிர் விதைகள் வழங்கும் முறைமை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அரசாங்கம் நட்டஈடு வழங்கும் 6 பயிர்களுக்கு மேலதிகமாக ஏனைய பயிர்களுக்கும் ஓரளவு நஷ்டஈடு வழங்க எதிர்பார்த்துள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
Post a Comment