பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள கிரிபட்டி 32 தீவுகளையும், ஒரு சிறிய பவளத் தீவையும் கொண்டுள்ளது. அங்கு 2024 ஆம் ஆண்டு நிறைவடைந்து தற்பொழுது 2025ம் ஆண்டு பிறந்திருக்கிறது.
இலங்கை நேரப்படி பிற்பகல் 3:30 மணியளவில் கிரிபாட்டி தீவில் புத்தாண்டு உதயமானது.
இந்நிலையில் கிரிபாட்டி மக்கள் பட்டாசு வெடித்தும், ஆட்டம் பாட்டத்துடன் இனிப்பு வழங்கி புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர்.
கிரிபாட்டி தீவுக்குப் பிறகு 2025 புத்தாண்டில் அடியெடுத்து வைத்த அடுத்தடுத்த நாடுகள் பசிபிக் தீவுகளான டோங்கா சமோவா மற்றும் நியூசிலாந்து ஆகியவை புத்தாண்டை வரவேற்றுள்ளது.
இலங்கையும் இன்னும் சில மணி நேரங்களில் புத்தாண்டை வரவேற்க மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறது. நாம் இருப்பிடம் மற்றும் நேரக் காலத்தை பொறுத்து, புத்தாண்டில் அடியெடுத்து வைப்பதற்கு இன்னும் சில மணிநேரங்களே உள்ளது.
Post a Comment