Ads (728x90)

உலக மக்கள் தொகை புத்தாண்டில் 8.09 பில்லியனாக (809 கோடி) உயர்வடையும் என்று அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்புத்துறை கணித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில் இந்தாண்டில் மட்டும் உலகின் மக்கள் தொகை 7 கோடியே 10 லட்சம் அதிகரித்துள்ளதாக அமெரிக்க கணக்கெடுப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டை விட மக்கள் தொகை உயர்வு 0.9% குறைவாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுளளது.

ஜனவரி மாதம் ஒவ்வொரு நொடிக்கும் சராசரியாக 4.2 குழந்தைகள் பிறக்கும் என்றும் 2 பேர் இறப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேற்றங்கள் அதிகரித்துள்ளன என்றும் இதனால் ஒவ்வொரு 23.2 நொடிக்கும் அமெரிக்க மக்களில் ஒரு எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget