Ads (728x90)

உலகப்பாரம்பரியச் சின்னமாக விளங்கும் சிகிரியாவை சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தவும் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும், கொரியா சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் முன்வந்துள்ளது.

சிகிரியா பாறைக்கு அணுகு சாலை மேம்பாடு, மாற்று அணுகு சாலை அமைத்தல், சிகிரியா அருங்காட்சியகம், உணவகம் மற்றும் பற்றுச்சீட்டு பெறும் இடம் உள்ளிட்ட பல திட்டங்கள் இதில் அடங்குகின்றன. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு 2.4 பில்லியன் ரூபாவாகும்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் மத்திய கலாசார நிதியத்திற்கும், கொரியா சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடவும் முன்மொழியப்பட்டுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கடந்த 27ஆம் திகதி புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி தலைமையில் இடம்பெற்றுள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget