Ads (728x90)

இந்த நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓட இடமளிக்கமாட்டோம் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.

இன, மத வன்முறைகளைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நாட்டில் இன, மத ரீதியிலான சில பிரச்சினைகள் இருக்கின்றமை உண்மைதான், அவற்றுக்கு நாம் தீர்வு காண்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அந்தப் பிரச்சினைகளை ஊதிப்பெருப்பிக்கும் வகையில், வன்முறைகளைத் தூண்டும் வகையில் எவராயினும் கருத்துக்களை வெளியிட்டால் அவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் மீண்டும் இரத்த ஆறு ஓட இடமளிக்கமாட்டோம் எனவும், வேரூன்றியிருந்த தேசிய இனப்பிரச்சினை ஆயுதப் போராட்டமாக மாறியதால்தான், வடக்கு மற்றும் தெற்கு இடையேயான உறவு அறுந்ததாகவும், பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை அந்த நிலைமை மீண்டும் வர இடமளியோம் எனவும் புதிய அரசமைப்பின் ஊடாகத் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்போம் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மேலும் தெரிவித்தார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget