கதை நாயகனாக விஜய் சேதுபதியும், கதாநாயகனாக போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் சூரியும் நடித்திருக்கின்றனர். பிரகாஷ்ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஶ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் 'தெனந் தெனமும்' பாடல் வெளியாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்தது.
இந்நிலையில் தற்போது விடுதலை பாகம் 2 படத்தின் டிரெய்லர் வெளியாகியிருக்கிறது.
வாத்தியார் விஜய் சேதுபதியின் முன்கதை மற்றும் சூரி அதிரடியாக விஜய் சேதுபதியை கைது செய்த பிறகு என்ன நடந்தது என்பதை மையப்படுத்தியதாக காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.
களத்தில் மக்களுக்காகப் போராடும் விஜய் சேதுபதி - மஞ்சு வாரியர் இருவருக்குமான அழகிய காதல் காட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன.
Post a Comment