ஒரு வருடம் மாதாந்த நன்கொடை உதவி வழங்கும் இந்தத் திட்டமானது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் பல்வேறு புலமைப்பரிசில் திட்டங்களில் ஒன்றாகும்.
இந்தியாவால் வருடாந்தம் 710 புலமைப்பரிசில்கள் இலங்கை மாணவர்களுக்காக வழங்கப்படுவதுடன் இதில் 200 க்கும் அதிகமானவை முழுமையான நிதி அனுசரணையினைக் கொண்டதுடன் முழுமையான கல்விக்கடணம், மாதாந்த உதவித்தொகை, காகிதாதிகள் மற்றும் புத்தகங்களுக்கான கொடுப்பனவு மற்றும் போக்குவரத்து செலவீனம் ஆகியவற்றை முழுமையாக உள்ளடக்கியதாக காணப்படுகின்றன.
அத்துடன் பொறியியல், மனிதநேயம், விஞ்ஞானம், விவசாயம், பாரம்பரிய மருத்துவம் குறித்த கற்கைகள் வரையான பல்வேறு துறைகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் கலாநிதி கற்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கியவையாகவும் இந்நிதியுதவி திட்டம் உள்ளன.
Post a Comment