மவுன்ட் மௌங்கானுய், பே ஓவல் விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 186 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பில் மார்க் சாப்மேன் அதிகபட்சமாக 42 ஓட்டங்களையும், டிம் ராபின்சன் மற்றும் மிட்செல் ஹே ஆகியோர் தலா 41 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் வனிந்து ஹசரங்க 02 விக்கெட்டுக்களையும், நுவன் துஷாரா, மதீஷ பத்திரன ஆகியோர் தலா 01 விக்கெட்டினை வீழ்த்தியுள்ளனர்.
இதன்படி 187 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் குசல் பெரேரா அதிகபட்சமாக 48 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் ஜேக்கப் டபி 04 விக்கெட்டுகளையும், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி ஆகியோர் தலா 02 விக்கெட்டினை வீழ்த்தியுள்ளனர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை ஒரு போட்டி மீதிமிருக்க 2 - 0 என்ற ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து கைப்பற்றியது.
Post a Comment