Ads (728x90)

இலங்கையை சுற்றுலாப் பயணிகளின் கவரக்கூடிய இடமாக மாற்றுவதற்குத் தேவையான திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

துய்மையான இலங்கை திட்டத்தை மீளமைப்பதன் ஊடாக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பான செயற்பாடுகள் வலுவடையும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆசியாவின் மிகவும் பெறுமதிமிக்க மற்றும் பசுமையான தீவாக இலங்கையை நிலைநிறுத்துவது பற்றியும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

சுற்றாடல் மற்றும் கலாசாரத் துறைகள் மூலம் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்தும் இந்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்துவதில் முறையான மற்றும் முறைசாரா துறைகளில் உள்ள அனைத்து தரப்பினர்களையும் ஒன்றிணைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.


Post a Comment

Recent News

Recent Posts Widget