பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமர்வின் போது அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் குறித்து எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் ஒரு மாதத்துக்கு முன்னர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன். கல்வி பிரதி அமைச்சருடனும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரதிநிதிகள் இரண்டு முறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். பாதிக்கப்பட்டுள்ள தரப்பினருக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க தலையிடுவோம் என்று உத்தரவாதமளித்தோம். இதற்கமைவாகவே அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தேன்.
கல்வி அமைச்சின் முன்பாக இடம்பெற்ற போராட்டத்தை அரசாங்கம் அடக்கவில்லை. அங்கு ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்தவே பொலிஸார் தலையிட்டுள்ளனர். முறையான திட்டமிடல் இல்லாமல் அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் பல்வேறு பிரச்சினைக்கு முகங் கொடுத்துள்ளார்கள்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுப்போம். எதிர்க்கட்சியினர் கலக்கமடைய தேவையில்லை என்றார்.
Post a Comment