இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயத்தின் நிறுவுநர் தினம் மற்றும் பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
நாங்கள் கல்வி கற்ற காலத்துக்கும், தற்போதைய காலத்துக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கின்றது. அன்றைய காலத்தில் நாம் தனியார் கல்வி நிலையங்களுக்கு கூட செல்வதில்லை. அதற்கான தேவைப்பாடு ஏற்படவில்லை.
கல்வியால்தான் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். கிராமத்தின் அபிவிருத்தியோ, எதுவாகினும் கல்வியால் அந்த மாற்றங்களை உருவாக்க முடியும்.
அதேநேரம் கல்வியில் எவ்வளவு உயர்ந்து விளங்கினாலும் நாங்கள் பண்புள்ளவர்களாக இல்லாவிட்டால் எம்மை யாரும் மதிக்க மாட்டார்கள்.
உயர்பதவியிலிருந்தாலும் பண்பு இல்லாவிட்டால் யாரும் எம்மை மதிக்க மாட்டார்கள். பதவி வரும் போது பணிவு வரவேண்டும்.
இன்றைய மாணவ சமுதாயத்துக்கு பணிவு, இரக்கம், அன்பு என்பவற்றை ஆசிரியர்கள் கூடுதலாக போதித்து அவர்களை ஒழுக்கமுள்ளவர்களாக மாற்றவேண்டும்.
ஆசிரியர்கள் அன்றைய காலத்தில் எமக்கு அடித்தால் நாம் வீட்டில் சென்று சொல்வதற்குப் பயப்படுவோம். ஏனென்றால் வீட்டிலும் மீண்டும் அடி விழும்.
ஆனால் இன்று அது தலைகீழாகிவிட்டது. ஆசிரியர்கள் மாணவர்களை தண்டிப்பது என்பது அவர்களை எதிரியாகக் கருதி அல்ல. அவர்களின் வளர்ச்சிக்காகவே தண்டிக்கின்றனர்.
இன்று தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பதற்கே எல்லோரும் தயங்குகின்றனர். அந்தளவு தூரத்துக்கு பயம். நமக்கு ஏன் வீண் வம்பு என்று ஒதுங்கிப் போகின்றனர்.
எங்களின் மனநிலை மாறவேண்டும். இளமையில் இந்த மாணவர்களிடத்தில் சரியான பழக்க வழக்கங்களை, விழுமியங்களை ஆசிரியர்கள் விதைக்க வேண்டும்.
அப்போதுதான் எதிர்காலத்தில் சிறந்த சமூகத்தை கட்டியெழுப்பக் கூடியதாக இருக்கும். நாம் மற்றவருக்கு உதவவேண்டும். பதவிகள் சேவை செய்வதற்காக வழங்கப்படுகின்றன. அவற்றைப் பயன்படுத்தி மக்களுக்கு சரியான சேவைகளை வழங்க வேண்டும்.
இல்லாவிடின் அந்தப் பதவியில் இருப்பதில் அர்த்தமில்லை என ஆளுநர் தெரிவித்துள்ளார்.
Post a Comment