Ads (728x90)

யாழ்.மாவட்டத்தில் லெப்டோபைரோசிஸ் (Leptospirosis) எனப்படும் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்

இதுவரை 76 பேர் எலிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தின் பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றும் கரவெட்டி ஆகிய 3 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் லெப்டோபைரோசிஸ் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இதுவரை எலிக் காய்ச்சலினால் யாழ். மாவட்டத்தில் 07 இறப்புக்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget