கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்துக்கு “ரெட்ரோ” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ரொமான்டிக் மற்றும் ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள இந்த திரைப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
நடிகை பூஜா ஹெக்டே மற்றும் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
வெளியான ரெட்ரோ டீஸரில், சூர்யாவை காதலுக்காக தன்னை சீர்திருத்திக்கொள்ளும் ஒரு மனிதனாக காட்டப்பட்டுள்ளார்.
ரெட்ரோவில் ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், சுஜித் சங்கர், கருணாகரன், தமிழ், பிரேம் குமார், ராமச்சந்திரன் துரைராஜ், சந்தீப் ராஜ், முருகவேல், ரம்யா சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
திரைப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படத்தின் வெளியீட்டுத் திகதியை தயாரிப்பாளர்கள் இன்னும் அறிவிக்கவில்லை.
இந்த டீசர் வெளியான ஒரு நாளில் ஒரு கோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளது.
Post a Comment