புதிய தலைமுறை சிப் மூலம் குவாண்டம் கம்ப்யூட்டிங்கில் ஒரு முக்கிய சவாலை சமாளித்துவிட்டதாக கூகுள் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பத்தில் ஜாம்பவானாக இருக்கும் நிறுவனம் வில்லோ என்ற குவாண்டம் சிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
எவ்வளவு சிக்கலான கணக்குகளையும் கூட இந்த சிப் மூலம் வெறும் ஐந்து நிமிடங்களில் தீர்க்க முடியுமாம்.
அதாவது வழக்கமான கம்ப்யூட்டர் பல கோடி ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் கணக்குகளைக் கூட இது 5 நிமிடங்களில் முடித்துவிடுமாம்.
தற்போது இருக்கும் கம்ப்யூட்டிங் அமைப்புகளைத் தாண்டி அதிவேகமான கம்ப்யூட்டிங் அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதில் மைக்ரோசாப்ட், கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், கூகுள் இப்போது முதல்முறையாக அப்படியொரு சிப்பை உருவாக்கி இருக்கிறது.
வரும் காலத்தில் இது மருத்துவம், மிக்கல தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் பெரியளவில் நமக்கு கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குவாண்டம் சிப் என்பது குவாண்டம் இயக்கவியலின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு சிப் ஆகும்.
வழக்கமான கணனிகள் “பிட்கள்” (0 அல்லது 1) மூலம் இயங்கும். அதாவது ஒரு நேரத்தில் 0 அல்லது 1 என இரண்டில் எதாவது ஒன்றாக மட்டுமே இருக்க முடியும்.
ஆனால் குவாண்டம் சிப்கள் “குபிட்கள்” மூலம் இயங்கும். அதாவது 0, 1 என இரண்டுமாக ஒரே நேரத்தில் இந்த குபிட்களால் இயங்க முடியும். வில்லோ சிப்பில் 105 குபிட்கள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
Post a Comment