Ads (728x90)

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று பிற்பகல் 5.30 மணியளவில் புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை சென்றடைந்தார்.

இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி எஸ்.முருகன், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்து சமுத்திர வலயத்தின் மேலதிகச் செயலாளர் புனித் அகர்வால், இந்திய உபசரணைப் பிரதானி அன்ஷுமன் கவூர்  உள்ளிட்ட இராஜதந்திரிகள் ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பளித்தனர்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் விஜயம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் சிறப்பாக பிரசாரம் செய்திருந்ததுடன், புதுடில்லி நகரின் பிரதான சுற்றுவட்டாரத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் உள்ளிட்டவர்களை இன்று இரவு சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்டோரும் இந்த சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டுள்ளனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget