நாரஹேன்பிட்டியில் உள்ள 'நில மெதுர' கட்டிடத்தில் அமைந்துள்ள உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள், அரசாங்க அதிபர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்தார்.
எமது நாட்டை புதிய நிலைக்கு உயர்த்தி வைப்பதற்காக வறுமையை ஒழித்தல், டிஜிட்டல் மயமாக்கல், சமூகத்தை கருத்தியல் ரீதியாக மாற்றியமைத்தல் ஆகிய மூன்று துறைகளின் கீழ் “தூய்மையான இலங்கை” ஊடாக பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அந்த பணியை நிறைவேற்றும் போது எந்தவொரு உத்தியோகத்தருக்கும் அசௌகரியம், அநீதி அல்லது அசாதாரணம் இழைக்கப்பட்டால், அந்த நபரின் பாதுகாப்பிற்காக தாம் முன் நிற்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார்.
எவரேனும் அதிகாரியொருவர் அந்த திட்டத்தை சிதைக்கும் நோக்கில் தாமதப்படுத்தாவாராயின் அதற்கும் நியாயமான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் சமூக நிலைத்தன்மையை வலுப்படுத்தும் அதே வேளையில் நாட்டின் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை விழிப்புணர்வை வளர்ப்பதற்காக இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
“தூய்மையான இலங்கை” திட்டத்தை நடைமுறைப்படுத்துவதை மேற்பார்வையிட ஜனாதிபதியின் செயலாளர் உட்பட 18 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஒன்றும் நியமிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment