அண்மைய சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு ஜப்பான் அரசாங்கம் 300 மில்லியன் ரூபா பெறுமதிமிக்க நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது.
இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரகம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) ஆகியவற்றின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட அவசரகால பொருட்கள் சனிக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன.
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் இசமோடோ அகியோ உத்தியோகபூர்வமாக உள்ளூர் அதிகாரிகளிடம் பொருட்களை கையளித்தார். சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மாவட்ட செயலாளர்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்படும்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று மாலை இடம்பெற்ற இந்த கையளிப்பு நிகழ்வில் இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் உதய ஹேரத் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) இலங்கை அலுவலக பிரதம பிரதிநிதி செட்சுயா யமடா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நன்கொடையாக வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களில் 230 கூடாரங்கள், 1,300 மெத்தைகள் மற்றும் 30 தார்ப்பாய் சீட்கள் அடங்குகின்றன.
Post a Comment