Ads (728x90)

வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சுற்றுலா ஆகிய இருதுறைகள் முதன்முறையாக ஒரே அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ரேஸ் கோர்ஸ் வளாகத்தில் நேற்று ஆரம்பமான ”2024 சர்வதேச பஜார் மற்றும் கலாசார விழா” நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களின் பல சாவடிகளும் இந்த விழாவில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் தூதர்கள் மற்றும் பிற அதிகாரிகளுடன் பேஷன் ஷோவும் நடைபெற்றது.

இதன் மூலம் எமக்கு கிடைக்கும் நிதியானது கொழும்பு வடக்கு ராகமவில் உள்ள கல்லீரல் நோய்களுக்கான எம்.எச்.ஓமர் கல்லீரல் பராமரிப்பு நிலையத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். இலங்கைக்கு பிரத்தியேகமான சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கு இது ஒரு சிறந்த வழியாகும். 

இராஜதந்திர மற்றும் சர்வதேச நிறுவனங்களின் உறுப்பினர்களால் திருப்தியுடன் காட்சிப்படுத்தப்படும் இந்த பேஷன் ஷோவின் மூலம் இலங்கையின் ஆடைத்துறையின் நிலைத்தன்மை நன்கு நிரூபிக்கப்பட்டுள்ளது என அங்கு உரையாற்றிய அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார் .

எங்கள் பேஷன் டிசைனர்கள் தங்கள் திறமையை இப்படி வெளிப்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களது தயாரிப்புகள், உங்கள் திறமைகள் மூலம் இலங்கையை உலகிற்கு கொண்டு செல்ல முடியும். நாங்கள் அதை எளிதாக செய்ய விரும்புகிறோம். எங்களின் பாரம்பரியத்தை நவீனத்துடன் கலந்து உங்கள் வடிவமைப்புகளை வழங்கியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 


Post a Comment

Recent News

Recent Posts Widget