Ads (728x90)

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்த மெய்ப்பாதுகாவலர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு நிலை அறிக்கைகளை ஆராய்ந்ததன் பின்னர் பதில்பொலிஸ் மா அதிபர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த 116 பாதுகாப்பு படையினர் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 38 பொலிஸ் பிரிவுகளுக்கு மாற்றப்பட்ட இக்குழுவில் 7 தலைமை ஆய்வாளர்கள் மற்றும் நான்கு பொலிஸ் ஆய்வாளர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக 67 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தற்போது கடமையில் உள்ளனர். 

மேலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மெய்ப்பாதுகாவலர்களின் எண்ணிக்கை ஐம்பத்தொன்றாகவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மெய்ப்பாதுகாவலர்களின் எண்ணிக்கை ஐம்பத்தெட்டாகவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் எதிர்காலத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மெய்ப்பாதுகாவலர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget