இதற்கமைய இன்று 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 20 சதவீதத்தால் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி வீட்டுப்பிரிவின் கீழ் 0-30க்கு இடைப்பட்ட அலகுக்கான கட்டணம் 6 ரூபாயில் இருந்து 4 ரூபாவாகவும், 31-60க்கு இடையில் 9 ரூபாவிலிருந்து 6 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த மின்சார கட்டண திருத்தத்தின்படி வீட்டுப்பிரிவிற்கான மின்சாரக் கட்டணம் 20 சதவீதத்தால் குறைவடையும் நிலையில் மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணம் 21 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.
உணவகங்களுக்கு 31 சதவீதமும் மற்றும் தொழில்துறைக்கு 30 சதவீதமும் மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், பொது நோக்கத்திற்கான மின்சாரக் கட்டணங்கள் 12% குறைக்கப்பட்டுள்ளன.
அரசு நிறுவனங்களுக்கான கட்டணங்களை 11 சதவீதத்தாலும் மற்றும் தெரு விளக்குகளுக்கான கட்டணங்களை 11 சதவீதத்தால் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment