Ads (728x90)

பெருந்தோட்டப் பாடசாலைகளில் 60 திறன் வகுப்பறைகளை (Smart class room) நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சகத்தின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் சத்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையே இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானது.

இந்நாட்டின் பெருந்தோட்ட சமூகத்தில் உள்ள டிஜிட்டல் இடைவௌியை குறைப்பதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கையாக, நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் உள்ள பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு இந்த திறன் வகுப்பறைகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தோட்டப் பாடசாலைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவது இதன் மற்றொரு நோக்கமாகும். இதற்காக இந்திய அரசாங்கம் 508 மில்லியன் ரூபா மானிய உதவியை வழங்கியுள்ளது. மேலும் இலங்கை அரசாங்கமும் இந்த திறன் வகுப்பறைகளுக்கு 115 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget