இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி 18 முதல் 25 ஆம் திகதி வரை நடைபெறுவதுடன், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 25 ஆம் திகதி பிற்பகல் நடைபெறும்.
பெப்ரவரி 27 முதல் மார்ச் 21 வரை குழுநிலை விவாதம் எனப்படும் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறவுள்ளது.
இதற்கிடையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு புதிய வேட்புமனுக்களை கோரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலமும் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய வேட்புமனுக்களை கோரும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கும்.
Post a Comment