மேலும், இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், அந்த பாடல் தற்போது 14 மில்லியன் பார்வையாளர்களை பெற்று படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் மற்றும் யோகிபாபு, வினய், ஜான் கொக்கன், லட்சுமி ராமகிருஷ்ணன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
அஜித் நடித்த ’விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் திருநாளில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பாராத காரணத்தினால் இந்த படம் பொங்கலுக்கு வெளியீடு இல்லை என லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ’விடாமுயற்சி’பொங்கல் வெளிவராத நிலையில் பல திரைப்படங்கள் தங்களது வெளியீட்டு திகதியை அறிவித்துள்ளன.
அதே தேதியில் சிபிராஜ் நடித்துள்ள ”டென் ஹவர்ஸ்”, கேப்டன் மகன் சண்முகபாண்டியன் நடித்துள்ள ”படைத்தலைவன்”, மிர்ச்சி சிவா நடித்துள்ள ”சுமோ” ஆகிய படங்கள் வெளிவருகின்றன.
Post a Comment