Ads (728x90)

அம்பாந்தோட்டையில் 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சும், சீனாவின் சினோபெக் நிறுவனமும் கைச்சாத்திட்டுள்ளன.

இந்த ஒப்பந்தம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தற்போதைய சீன பயணத்தின் போதே கைச்சாத்திடப்பட்டுள்ளது. இது அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்ட அதிகூடிய வெளிநாட்டு முதலீட்டைக் குறிக்கும் என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

முன்மொழியப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 2 லட்சம் பீப்பாய்கள் எண்ணெய் திறன் கொண்டது. அதில் கணிசமான அளவு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சீனாவிடமிருந்து இலங்கைக்கு கிடைத்துள்ள இந்த பாரிய முதலீடு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், அம்பாந்தோட்டை பிரதேசத்தில் உள்ள குறைந்த வருமானம் பெறும் மக்கள் மற்றும் முழு இலங்கை மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் பங்களிக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ ஜென்ஹோங், சீனாவிற்கான இலங்கைத் தூதுவர் மஜிந்த ஜயசிங்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget