Ads (728x90)

நிலையான, வலுவான ஆட்சி மற்றும் வெளிப்படைத்தன்மையுள்ள பொருளாதாரத்தைக் கொண்ட இலங்கையில், முதலீடு செய்ய வருமாறு சீன முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து இன்று ஏற்பாடு செய்திருந்த முதலீட்டு அமர்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் விஜயத்தின் மூன்றாம் நாளுடன் இணைந்ததாக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த மாநாட்டில் சீன டியான்யிங் இன் கோபரேசன், சீன ஹார்பர் பொறியியல் நிறுவனம், சீன தொலைத் தொடர்பு நிர்மாண கம்பெனி லிமிடெட், சீன பெட்ரோ கெமிக்கல் கூட்டுத்தாபனம், மெடலர்ஜிகல் கோபரேசன் ஒப் சைனா நிறுவனம், சீன சிவில் பொறியியல் நிர்மாணக் கூட்டுத்தாபனம், சீன எனர்ஜி இன்டர்நெசனல் குழும நிறுவனம் மற்றும் குவாங்சு பொதுப்போக்குவரத்து குழுமம் உட்பட பல முன்னணி சீன நிறுவனங்கள் பங்கேற்றன.


Post a Comment

Recent News

Recent Posts Widget