அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் முன்னாள் துணை ஜனாதிபதியுமான இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை.
இந்நிலையில் 47வது ஜனாதிபதியாக டிரம்ப் இன்று பதவி ஏற்றார். அதன்படி, கேப்பிடல் எனப்படும் பாராளுமன்ற கட்டடத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது.
ஜனாதிபதி டிரம்ப் பதவியேற்பு விழாவில் முன்னாள் ஜனாதிபதிகள் ஜோர்ஜ் புஷ், பில்கிளின்டன், பராக் ஒபாமா, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தொழிலதிபர் அம்பானி மற்றும் அவரது மனைவி நீட்டா அம்பானி உட்பட உலக தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment