Ads (728x90)

ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ஆற்றிய உரையில் டிரம்ப் அமெரிக்காவின் பொற்காலம் ஆரம்பமாகியுள்ளது. இந்த நாளில் இருந்து எங்கள் நாடு செழிப்படையும், மதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மெக்சிக்கோ எல்லையில் தேசிய அவசரகாலநிலையை அறிவிக்கும் பிரகடனம் இன்று வெளியிடப்படும் என அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைவது உடனடியாக தடுக்கப்படும் என தெரிவித்துள்ள அவர் மில்லியன் கணக்கான அமெரிக்காவிற்கு சொந்தமில்லாத குற்றவாளிகள் எங்கிருந்து வந்தார்களோ அவர்களை அங்கே அனுப்பும் நடவடிக்கை ஆரம்பமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனது உயிர் ஒரு நோக்கத்திற்காகவே காப்பாற்றப்பட்டது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்

எனது ஒரு உயிர் ஒரு நோக்கத்திற்காகவே காப்பாற்றப்பட்டது. கடந்த 8 வருடங்களில் வேறு எந்த ஜனாதிபதியையும் விட நானே அதிகளவு சோதனைகளை அனுபவித்துள்ளேன்.

சிலர் எங்களின் நோக்கத்தை தடுத்து நிறுத்த முயன்றனர். சிலர் எனது சுதந்திரத்தை, எனது உயிரை பறிக்க முயன்றனர்.

அமெரிக்கா மிகவும் சிறந்ததாக மாற்றும் நோக்கத்திற்காகவே எனது உயிர் காப்பாற்றப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget