Ads (728x90)

பாடசாலை மாணவர்களுக்கு காகிதாதிகள் வழங்குகின்ற வேலைத்திட்டத்தின் கீழ் அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கிடைக்காத ஏனைய தகைமையுடைய குடும்பங்களிலுள்ள மாணவர்களுக்கு 6,000 ரூபா  காகிதாதிகள் கொடுப்பனவை வழங்குவதற்கும் குறித்த கொடுப்பனவை வவுச்சர் ஒன்றின் மூலம் வழங்குவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார்.

அஸ்வெசும நலன்புரி நன்மைகளைப் பெறுகின்ற குடும்பங்களிலுள்ள மாணவர்களுக்கு காகிதாதிகளை வாங்குவதற்காக 6,000 ரூபா கொடுப்பனவு தற்போது அக்குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அஸ்வெசும நலன்புரி நன்மைகளைப் பெற்றுக் கொள்ளாத குடும்பங்களில் பெற்றோர்களை இழந்த மாணவர்கள், தாய் அல்லது தந்தை இயலாமைக்குட்பட்டுள்ள குடும்பங்களிலுள்ள மாணவர்கள் பற்றிய இற்றைப்படுத்தப்பட்ட தரவுத்தொகுதி ஒன்று இன்மையால் காகிதாதிகள் 2025 புதிய பாடசாலைத் தவணை ஆரம்பிக்கும் போது வழங்க வேண்டிய தேவைப்பாட்டைக் கருத்தில் கொண்டு நாடளாவிய ரீதியிலுள்ள 10,096 பாடசாலைகளில் மொத்தமாக 300 மாணவர்களை விடவும் குறைந்த மாணவர்கள் கல்வி பயில்கின்ற 6,576 பாடசாலைகளிலுள்ள அஸ்வெசும நலன்புரி நன்மைகளைப் பெற்றுக்கொள்ளாத குடும்பங்களிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் இக்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget