பாலைவன தேசமாக சவூதி அரேபியா உள்ளது. இங்கு காடுகள், புல்வெளிகள், மலைகள், பள்ளத்தாக்குகள், எரிமலைகள் இருக்கின்றன. இருப்பினும் நாட்டின் 95 சதவீதம் நிலம் என்பது பாலைவனமாக தான் இருக்கிறது.
இதனால் சவூதி அரேபியாவில் மழை என்பது அதிகம் பெய்யாது. இங்கு வெயில் தான் வெளுத்து வாங்கும். குறிப்பாக கோடைக்காலங்களில் 43 டிகிரி செல்சியஸை தாண்டி வெயில் என்பது நீடிக்கும்.
மெக்கா, மதீனா மற்றும் ஜெட்டா நகரங்களில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அல்-ஷாஃபியா எனும் பகுதியில் 49.2 மி.மீ மழையும், ஜெட்டாவின் அல்-பசதீன் பகுதியில் 38 மி.மீ மழையும், மதீனாவின் நபிகள் நாயகம் பள்ளிவாசல் பகுதியில் 36.1 மி.மீ மழையும், குபா மசூதி பகுதியில் 28.4 மி.மீ மழையும் பெய்துள்ளது.
மேலும் மெக்கா, மதீனா மற்றும் ஜெட்டா ஆகிய நகரங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment