சகல பாடசாலைகளிலும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் நாளை 02 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகி, எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன.
மேலும் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற சகல பாடசாலைகளிலும் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள முதலாம் வகுப்பு மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் இம்மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை இவ்வாண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் 2025 மார்ச் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகவும் பரீட்சை நேர அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
Post a Comment