பாலா இயக்கத்தில் அருண் விஜய், ரோஷிணி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வணங்கான்’. முதலில் சூர்யா நடித்து தயாரித்து வந்தார். பின்பு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அருண் விஜய்யை வைத்து இயக்கி முடித்துள்ளார் பாலா.
இப்படத்தினை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். பாடல்களில் ஜி.வி.பிரகாஷும், பின்னணி இசையில் சாம் சி.எஸ் ஆகியோரும் பணிபுரிந்துள்ளனர். இதனை விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment