Ads (728x90)

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று காலை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு அடங்கலான கண்காட்சியைப் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி சீன வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமான குங் அரண்மனை அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார்.

இதில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரும் இணைந்து கொண்டிருந்தனர்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கும், சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) க்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு சற்றுமுன்பு நடைபெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது சீன மக்கள் மண்டபத்தில் நடந்துள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Post a Comment

Recent News

Recent Posts Widget