Ads (728x90)

கொழும்பு முதல் காங்கேசன்துறை வரையான இரண்டு புதிய புகையிரத சேவைகள் இன்று முதல் காலை மற்றும் இரவு நேரங்களில் நடைபெறவுள்ளதாக யாழ். புகையிரத நிலையத்தின் தலைமை அதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார். இந்த சேவைகள் தினசரி இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

யாழிலிருந்து இன்று காலை 06.25 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படவுள்ள புகையிரதம் காலை 07.43 மணிக்கு கிளிநொச்சியையும், 09.02 மணிக்கு வவுனியாவையும், மாலை 04.00 மணிக்கு கொழும்பையும் சென்றடையும்.

இரண்டாவது புகையிரத சேவை மாலை 05.40 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்டு யாழ். புகையிரத நிலையத்தை 06.16 மணிக்கு வந்தடையும். அங்கிருந்து 06.40 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்பட்டு அதிகாலை 04.00 மணிக்கு கொழும்பை சென்றடையும்.

இதுவரையில் காங்கேசன்துறையிலிருந்து 06.00 மணிக்கு புறப்பட்டு யாழ் வந்தடைந்து. யாழிலிருந்து இரவு 07.00 மணிக்கு புறப்பட்ட இரவு தபால் புகையிரத சேவை நாளை முதல் காங்கேசன்துறையிலிருந்து இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு யாழ்ப்பாணத்தை 08.10 மணிக்கு வந்தடையும். மீண்டும் யாழ் புகையிரத நிலையத்திலிருந்து 08.25 மணிக்கு புறப்படவுள்ள இந்த புகையிரதம் அதிகாலை 04.40 மணிக்கு கொழும்பை சென்றடையும்.

மேலும் இன்றைய தினம் காலை 08.50 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்படும் முதலாவது புகையிரத சேவை மாலை 06.31 மணிக்கு யாழ் புகையிரத நிலையத்தை வந்தடையும். இந்த புகையிரதம் வவுனியா புகையிரத நிலையத்தை 03.25 மணிக்கும், கிளிநொச்சி புகையிரத நிலையத்தை மாலை 4.56 மணிக்கும் வந்தடையும்.  

இரண்டாவது புகையிரத சேவை கொழும்பிலிருந்து இரவு 07.15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 04.20 மணிக்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும்.

இதுவரையில் கொழும்பிலிருந்து 8.30 மணிக்கு புறப்பட்ட இரவு தபால் புகையிரத சேவை இன்று முதல் இரவு 9.00 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்டு யாழ்ப்பாணத்தை காலை 05.04 மணிக்கு வந்தடையவுள்ளது.



Post a Comment

Recent News

Recent Posts Widget