Ads (728x90)

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது. 15 மாதங்களாக நடைபெற்ற போர் முடிவுக்கு வந்துள்ளது. நிபந்தனைகள் இருந்தாலும் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் பல தரப்பிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மூன்று மணி நேர தாமதத்துக்குப் பின்பு இந்த போர் நிறுத்தம் உள்ளூர் நேரப்படி முற்பகல் 11.15க்கு அமுலுக்கு வந்துள்ளது.

ஹமாஸ் அமைப்பினால் விடுதலை செய்யப்படவுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளின் விபரங்களை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் வெளியிட்டுள்ள விபரங்களின் படி பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ள இளையவர்கள், முதியவர்கள் சிலரும் விடுதலை செய்யப்படவுள்ளனர். இவர்களின் படங்களை இஸ்ரேல் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

விடுதலை செய்யப்படவுள்ள பணயக்கைதிகளில் பிறந்து 9 மாதத்தில் கடத்தப்பட்ட குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget