Ads (728x90)

மாகாண மட்டத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவுகளை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

தற்போது காணப்படும் பொலிஸ் நிலையங்களுக்கு மேலதிகமாக இந்த பிரிவுகளை நிறுவுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது தென் மாகாணத்தில் இத்தகைய பிரிவு செயற்பட்டுவருவதாகவும், விசாரணைகளை முறைமைப்படுத்துவதே இதன் நோக்கமாகும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் சில விசாரணைகளை நேரடியாக பொலிஸ் மாஅதிபரின் கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சர் கூறினார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget