தைப்பொங்கல் என்பது நன்றியுணர்வுக்கான பண்டிகை, சூரியனால் உயிர் வாழ்வதற்காகவும், விவசாயிகளின் அயராத முயற்சிகளுக்காகவும் நன்றி தெரிவிக்கும் தருணம் இது. இயற்கையை கடவுளாக வழிபடும் எங்கள் மரபின் அடிப்படையில் இந்தத் திருநாள் முக்கியம் பெறுகின்றது.
எங்கள் பாரம்பரியங்களை ஊடுகடத்தும் வடிவிலும் இந்தத் தைப்பொங்கல் பண்டிகை சிறப்பானதாக அமைக்கின்றது எனத் தெரிவித்த அவர், வடக்கு மாகாணத்தின் இரு கண்களாக விவசாயமும், மீன்பிடியுமே இருக்கின்றன. எனவே விவசாயிகளுக்கு நன்றி செலுத்தும் இந்த அறுவடைத் திருநாள் எமது மாகாணத்துக்கு மிகவும் சிறப்பானது. எங்கள் விவசாயிகளுக்கு நன்றிக்கடனாக, அவர்களை செல்வச்செழிப்போடு வாழவைப்பதற்கு இந்தத் தைப்பொங்கல் பண்டிகையில் நாங்கள் உறுதிபூணுவோம்.
பொங்கலின் மகிழ்ச்சி ஒவ்வொரு வீட்டையும், ஒவ்வொரு இதயத்தையும் மனநிறைவாலும் நிரப்பட்டும். இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் என தனது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.
Post a Comment