Ads (728x90)

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து மக்களுக்கும் பிரித்தானியா பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தனது தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

உலகில் பல்வேறு நாடுகளில் இருக்கும் தமிழர்கள் கொண்டாடும் நாளாக இந்த தைப்பொங்கல் பார்க்கப்படுகிறது. இதற்கு பல்வேறு நாட்டு தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் “பிரித்தானியாவில் உள்ள தமிழ் சமூகத்திற்கும், உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும், தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என தனது வாழ்த்து செய்தியினை பதிவிட்டுள்ளார்.

மனித குலத்தின் மாண்பை நிலைநாட்டும் நன்றியுணர்வுக்கு மகுடம் சூட்டும் திருநாளாக தமிழர்களின் தைத்திருநாள் இன்று 14.01.2025 ந்திகதி கொண்டாடப்படுகின்றது.   


Post a Comment

Recent News

Recent Posts Widget