Ads (728x90)

நல்லாட்சி அரசாங்க காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட “அருகிலுள்ள பாடசாலை  சிறந்த பாடசாலை” கருத்திட்டத்தின் கீழ்  அரைகுறையாக நிர்மாணிக்கப்பட்டு கைவிடப்பட்ட பாடசாலை கட்டிடங்கள் அனைத்தையும் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் அஜித் பி. பெரேரா எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை கருத் தட்டத்தின் மூலம்  நிர்மாணிக்கப்பட்ட பல பாடசாலைகளின் நிர்மாணப் பணிகள் 50 விதமாகவும் 75 வீதமாகவும்  இடையில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. இவ்வாறு பெருமளவு பாடசாலைகள் காணப்படுகின்றன.

மூன்று  கிலோமீற்றர் எல்லைக்குள் அனைத்து மாணவர்களும் சென்று கல்வி கற்கக்கூடிய ஆரம்ப பாடசாலைகளை உருவாக்குவது எமது நோக்கம். அதுபோன்ற பல பாடசாலைகளை இணைத்து முழுமையான அனைத்து வசதிகளையும் கொண்ட பாடசாலைகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

அந்த வகையில் அரைகுறையாக நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து பாடசாலைகளும் முழுமைப்படுத்தப்படும் என்றார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget