Ads (728x90)

ஊடகவியல் விருதுகள் வழங்கும் இரவு நிகழ்வின் மைல் கல்லாகவுள்ள வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை இந்த வருடம் 5 சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் பெற்றுக்கொண்டனர்.

இந்த வருடத்துக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை அம்மையப்பாபிள்ளை யோகமூர்த்தி, என். எம். அமீன், சந்திரிக்கா விஜேசுந்தர, பென்னட் ரூபசிங்க மற்றும் ஸனிதா கரீம் ஆகிய ஐவர் பெற்றுள்ளனர்.

நாட்டின் அச்சு ஊடகத்துறையில் மிகச் சிறந்ததைக் கொண்டாடும் மிகச் சிறந்த ஊடகவியல் விருதுகள் வழங்கும் 25ஆவது நிகழ்வானது கல்கிசை, மவுண்ட் லவனியா ஹோட்டலின் எம்பயர் பால்றூம் மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

திறமையான, அர்ப்பணிப்புள்ள, விளைவை ஏற்படுத்திய ஊடகவியலாளர்களை கௌரவப்படுத்தும் கால் நூற்றாண்டு மைல்கல்லை இந்த வருடம் குறிப்பதாக உள்ளது.

விருதுகள் 18 பிரிவுகளில் வழங்கப்படுவதுடன் இந்த நிகழ்ச்சியானது இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்துடனும் அதனுடன் இணைந்த இலங்கை பத்திரிகைகள் சபை, இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் இலங்கை தொழில் புரியும் ஊடகவியலாளர்கள் சங்கம் ஆகியவற்றின் பங்காளித்துவத்துடன் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget