Ads (728x90)

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை ஜனாதிபதி மேற்கொள்ளும் போது முன்னெடுக்கப்பட இருந்த போராட்டத்தை தடுத்து நிறுத்துமாறு கோரி நீதிமன்றத்தில் பொலிசாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை யாழ். நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

யாழ்ப்பாணம் பொலிஸாரால் நேற்று இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. ஜனாதிபதியின் நிகழ்வுகளுக்கு இடையூறு இல்லாமல், அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில் கவனயீர்ப்பை முன்னெப்பதற்கான உரிமை, சகலருக்கும் இருப்பதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியதுடன் பொலிஸாரின் மனுவையும் தள்ளுபடி செய்தது.

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க நாளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget