Ads (728x90)

இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா (சோமசுந்தரம் சேனாதிராஜா) நேற்றிரவு காலமானார்.

உடல் நலக்குறைவால் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 82 ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளார்.

இவர் 1942 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 27 ஆம் திகதி பிறந்தவர். யாழ்ப்பாணம் வலி.வடக்கு மாவிட்டபுரத்தை சொந்த இடமாகக் கொண்டவர்.

மாவை சேனாதிராஜாவின் உடலை குடும்பத்தவர்களின் அனுமதியுடன் நாடாளுமன்ற சிறீதரன் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.        

Post a Comment

Recent News

Recent Posts Widget