Ads (728x90)

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை தூதுக்குழுவிற்கும் வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கு சீன அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், இலங்கைக்கு வருகை தருமாறு சீன ஜனாதிபதிக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அங்கு பல்வேறு தரப்பினருடன் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தோடு, இது தொடர்பிலான கூட்டறிக்கை தற்போது வௌியிடப்பட்டுள்ளது.

பல்துறை நடைமுறை ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து விரிவான பொதுவான புரிதல்களை எட்டியுள்ளதாக கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget