Ads (728x90)

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பில் ஏற்பாடுகள் உள்ளது என எண்ணிக்கொண்டே முன்னாள் ஜனாதிபதிகள் சிலர் உத்தியோகபூர்வ இல்லங்களில் வசித்து வருகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இல்லங்கள் வழங்கப்பட வேண்டும் என அரசியலமைப்பில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

முன்னாள் ஜனாதிபதிகள் தொடர்பான சட்டத்தில் அவர்களுக்கு பொருத்தமான இல்லமொன்று வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, விசாலமான அல்லது நவீன வசதிகொண்ட வீடு வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்படவில்லை.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான இல்லம் என்பது அரசியலமைப்பினால் வழங்கப்பட்டதொரு வரப்பிரசாதம் அல்லவெனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget