தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு வெந்நீரில் 3 தேக்கரண்டி தேனை கலந்து குடியுங்கள். இதனை ஒரு பழக்கமாக எடுத்துக் கொண்டு, வாரம் மூன்று முறை இதனை தொடர்ந்து குடியுங்கள். கண்டிப்பாக உங்கள் உடல் எடை வெகுவாக குறையத் தொடங்கும்.
பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.
இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து அடுப்பில் ஏற்றி சாறு சுண்டியதும் அதில் தேன் விட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கி ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு தேக்கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு வெந்நீர் அருந்தி வந்தால் 40 நாட்களில் தொப்பை குறைந்துவிடும்.
Post a Comment