Ads (728x90)

தூய்மையான இலங்கை (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் மாகாண ஒருங்கிணைப்பு அலுவலகம் இன்று காலை யாழ். பொலிஸ் நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, மீன்பிடி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget