Ads (728x90)

உள்நாட்டு வருமான திருத்தச் சட்ட மூலத்தினூடாக 15% சதவீத சேவை ஏற்றுமதி வரி விதிக்கப்படுவதால் சேவை வழங்குநர்கள் சிரமத்திற்குள்ளாக மாட்டார்கள் எனப் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஏனைய தனிநபர்கள் 36% வரை வருமான வரி செலுத்தும் நிலையில் சேவை ஏற்றுமதி துறையில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்ச வரம்பு 15% சதவீதத்திற்கு உட்பட்ட வரிகளை விதிப்பது நியாயமற்றது அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி வெளியிடப்பட்ட உள்நாட்டு வருமான திருத்த சட்ட மூலத்தின்படி, எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதிக்குப் பிறகு நாட்டிலிருந்து அந்நியச் செலாவணி சம்பாதிக்கும் தனிநபர்களுக்கு 15% சேவை வரி விதிக்கப்பட உள்ளது.

டிஜிட்டல் சேவை ஏற்றுமதி வழங்குநர்களுக்கு வெளிநாட்டிலிருந்து 15% சதவீத வரி விதிக்கப்பட்டால் எந்த வரியும் விதிக்கப்படாது.

அவர்களுக்கு 15% சதவீதத்திற்கும் குறைவாக வரி விதிக்கப்பட்டிருந்தால், மீதமுள்ள சதவீதத்திற்கு மட்டுமே இரட்டை வரி நிவாரணக் கொள்கையின் கீழ் கட்டணம் வசூலிக்கப்படும்.

அரசாங்கம் மேலதிக வரிகளை அறிமுகப்படுத்தியதாகக் கூறும் கூற்றுகளை அமைச்சர் ஜயந்த நிராகரித்தார். அவை தவறாக வழிநடத்துவதாகக் கூறிய அமைச்சர், சர்வதேச இரட்டை வரிவிதிப்பு ஒப்பந்தங்களின் கீழ் சேவை வழங்குநர்கள் நிவாரணம் பெறுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget