வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பிற்கு ஆதரவாக 155 வாக்குகளும், எதிராக 46 வாக்குகளும் வழங்கப்பட்டன. வாக்கெடுப்பின் போது ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசு கட்சி என்பன எதிராக வாக்களித்தன. இந்நிலையில் 109 மேலதிக வாக்குகளால் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த 17 ஆம் திகதி ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தின் மீதான இரண்டாம் வாசிப்பு தொடர்பான விவாதம் கடந்த 18 ஆம் திகதி ஆரம்பமானது. 7வது நாளாக நேற்று நடைபெற்ற வரவு-செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தைத் தொடர்ந்து வாக்கெடுப்பு இடம்பெற்றது.
Post a Comment