Ads (728x90)

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஏற்கனவே எடுத்துக் கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக இலங்கைத் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் தமிழரசுக் கட்சியின் தலைவர், பங்காளிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதுடன் தானும் கலந்துரையாடலில் ஈடுபட்டதாகவும், தேர்தலின் பின்னர் கூட்டாக ஆட்சியமைக்க முடியுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடுவதன் மூலமும், எங்களோடு இணைந்து பயணிக்கின்ற கட்சிகள் தனித்தனியே போட்டியிடுவதன் மூலமும் குறித்த தேர்தல் முறையின் கீழ் கூடுதலான ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget