சபையில் சமர்பிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகள் பின்வருமாறு:
2. மூலதனச் செலவுக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து 4%
3. தேசிய மேலாண்மை கட்டமைப்புக்காக 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
4. இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலாக டிஜிட்டல் அடையாள அட்டையை விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை
5. இலங்கை பொருளாதார அதிகார சபை உருவாக்கப்படும்
6. கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை ஜப்பானின் நிதியுதவியுடன் விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை
7. புதிய மற்றும் கண்டுபிடிப்பு நிதியத்தை ஸ்தாபிக்க 1,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
8. அரசாங்கத்திற்கு சொந்தமான சகல சொகுசு வாகனங்களையும் எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஏலத்தில் விட நடவடிக்கை
9. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனமோ அல்லது வாகன அனுமதிப்பத்திரமோ கிடையாது
10. அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் பலன்களை மதிப்பீடு செய்ய குழு
11. கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போஷாக்கு சத்துணவு திட்டத்திற்காக 7,500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
12. சுகாதாரத் துறைக்காக 604 பில்லியன் ரூபா ஒதுக்கீடு
13. தெரிவுசெய்யப்பட்ட முன்பள்ளிகளின் அபிவிருத்திக்காக 80 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
14. பாடசாலைகளை அடிப்படை வசதிகளை மேம்படுத்த 1,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
15. முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவு எதிர்வரும் ஜூலை முதல் 1,000 ரூபாவால் அதிகரிப்பு
16. மஹபொல மாணவர் உதவித்தொகை 7,500 ரூபாவாக அதிகரிப்பு
17. தரம் 5 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 1,500 ரூபா நிதியுதவி
18. யாழ்.நூலகத்திற்கு கணினிகள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்க 100 மில்லியன் ரூபா, ஏனைய நூலகங்களின் அபிவிருத்திக்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
19. திருகோணமலையில் 61 எண்ணெய் தாங்கிகளின் கூட்டு அபிவிருத்திக்கு நடவடிக்கை
20. பெரும்போகத்தில் நெல் கொள்வனவிற்காக 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
21. நெல் விநியோக சபை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை
22. நீர்ப்பாசனத்துறை அபிவிருத்திக்காக 78,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
23. வடக்கு தெங்கு முக்கோணம் உள்ளிட்ட புதிய தென்னந்தோப்பு அபிவிருத்திக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
24. சமூக பாதுகாப்பு செலவு (இழப்பீடு) 232.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு
25. சிறுநீரக நோயாளிகளுக்கான உதவித்தொகை 10,000 ரூபாவாக அதிகரிப்பு
26. முதியோர் உதவித்தொகையை ஏப்ரல் மாதத்திலிருந்து 5,000 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை
27. சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் புனர்வாழ்வு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறுவர்கள், ஆதரவற்ற சிறார்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு
28. இயற்கை அனர்த்தம் மற்றும் வனவிலங்கு பாதிப்பால் இடம்பெறும் உயிரிழப்புகள், அங்கவீனமடைவோருக்கான இழப்பீட்டு தொகை 10 இலட்சம் ரூபா வரை அதிகரிப்பு
29. சிரேஷ்ட பிரஜைகளுக்கு சிறப்பு வட்டி யோசனைத் திட்டம்
30. பண்டிகைக் காலத்தில் லங்கா சதொச ஊடாக உணவுப்பொதி
31. கொழும்பு நகரை சூழ வசதியான 100 பஸ்களுக்கு 3,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
32. புதிய பஸ் நிறுவனத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை
33. ரயில் பெட்டிகளை மறுசீரமைக்க 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
34. தனியார் மற்றும் இ.போ.ச பஸ்கள் ஒன்றிணைந்த நேர அட்டவணையில் பயணிக்க யோசனை
35. போதையற்ற சமூகத்தை கட்டியெழுப்ப 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
36. ஶ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு நாளாந்த நடவடிக்கைகளுக்காக திறைசேரியிலிருந்து நிதி ஒதுக்கப்படமாட்டாது
37. கிராமங்களில் வீதி அபிவிருத்திக்காக 3,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
38. வட மாகாணத்தில் கிராம வீதிகள் மற்றும் பாலங்களின் அபிவிருத்திக்காக 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
39. பெருந்தோட்ட வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 4,267 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
40. மலையக தமிழ் இளைஞர்களின் தொழில்பயிற்சி, வாழ்வாதார மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக்காக 2,450 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
41. மலையக தமிழ் பாடசாலைக்கு திறன் வகுப்பறைகளுக்காக 866 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
42. கழிவகற்றல் முகாமைத்துவத்திற்காக 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
43. யானை-மனித மோதலை கட்டுப்படுத்த 640 மில்லியன் ஒதுக்கீடு
44. ”இலங்கையர் நாள்'' தேசிய வைபவத்தை நடத்த 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
45. அரச ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் 15,750 ரூபாவாக உயர்த்தப்படும்.
46. அரச சேவையின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 24,250 ரூபாவிலிருந்து 40,000 ரூபாவாக 15,750 ரூபாவால் அதிகரிப்பு
47. அரச ஊழியர்களுக்கு 8,250 ரூபா அதிகரிப்பை குறைந்தபட்ச மாத சம்பள அடிப்படையில் மேற்கொள்ள யோசனை
48. தனியார் துறையில் குறைந்தபட்ச மாத சம்பளம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து 27,000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும்
49. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தலையீடு செய்யும்
Post a Comment